சித்ரா பாணியில் இறந்து போன நடிகை- இன்னும் சில நாட்களில் வீட்டில் விஷேசமாம்..
சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகையின் வீட்டில் ஒரு விஷேசம் நடக்கவிருந்தாக சீரியல் நடிகையின் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிறடிக்க ஆசை சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளையும், மாமியாரின் பண ஆசையையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இதன்படி, தற்போது முத்து க்ரிஷை எப்படியாவது தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீனாவிடம் பல வழிகளில் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். ஆனால் மீனாவோ உண்மையறிந்து கொண்டதால் க்ரிஷை தத்தெடுக்க வேண்டாம் என்கிறார்.

இப்படி சீரியல் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் வேளையில் மீனாவின் தங்கையான சீதாவின் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ராஜலட்சுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர், இதற்கு முன்னர் சுமாராக 5 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய பாக்கிலட்சுமி சீரியலில் பாக்கியாவுடன் வரும் சமையல் கலைஞர்கள் வேடத்தில் நடித்திருந்தார்.
இன்னும் சில நாட்களில் வீட்டில் விஷேசமாம்..
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக ராஜலட்சுமி பற்றிய பதிவுகள் வைரலாக்கப்பட்டு வருகின்றன.
குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இவரின் மகள் பெரியவளாகி விட்டாராம். இன்னும் சில நாட்களில் அதற்கு விழா கொண்டாடுவதற்காக பத்திரிகை வைப்பதாக கூறியிருக்கிறார்.

இது குறித்து கம்மன் மீனா போட்ட பதிவில், “உங்க மகளுக்கு பெரியவள் ஆன விழா உள்ளது. பத்திரிகை வைப்பதற்காக வருகிறேன் என்ற சொன்னீர்களே.. அதற்கு உங்கள் உயிரை நீங்களே எடுத்து வீட்டீர்ளே. அங்கையாவது நிம்மதியாக இருங்கள்..” என கண் கலங்கும் வகையில் பதிவை போட்டியிருக்கிறார்.
இந்த பதிவை பார்த்த பின்னர் அவரின் குடும்பத்திலுள்ளவர்களை நினைத்து இணையவாசிகள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |