பாரதி கண்ணம்மா நடிகை திடீர் மரணம்: சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்
தற்போது திரையுலகைப் பொறுத்தவரையில் எங்கு பார்த்தாலும் மரணச் செய்திகள்தான் நம் காதை வந்து எட்டுகின்றன.
அந்த வகையில் தற்போது சின்னத்திரை நடிகை ஒருவர் மரணமடைந்துள்ளார். சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்தவரும் பழம்பெரும் நடிகையுமான விஜயலட்சுமி தனது 70 ஆவது வயதில் இன்று காலை நித்திரையிலேயே உயிரிழந்துள்ளார்.
இவர் கொஞ்ச நாட்களாகவே சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் மருத்துவமனையில் இருந்து வீடு வந்த அவர், சோர்வாகவே இருந்துள்ளார். இன்று காலை தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளமை அனைவரையும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதற்கு திரையுலகினர் அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.