அஜித் பட பாடலை தம்பியுடன் வைப் செய்த ஆல்யா மகள்- ரசிகர்களின் மனதை தொட்ட video
அஜித் பாடலை படுக்கையறையில் வைப் செய்த ஆல்யா மகளின் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
ஆல்யா மானசா
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா.
இவர் முதன்முதலில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
இதற்கிடையில், அவருடன் இணைந்து நடித்த கார்த்திக் சஞ்சீவை காதலித்து திருமணம் கடந்த 2019-ம் ஆண்டு செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பின்னர் குழந்தைகள் பிறந்ததால் சில ஆண்டுகள் சீரியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்த ஆல்யா மானசா, கடந்த 2022-ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
அதே தொலைக்காட்சியில் கார்த்திக் சஞ்சீவ் கயல் சீரியலில் நாயகராக நடித்து வருகிறார். இவ் இரண்டு சீரியல்களும் குறித்த தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கின்றன.
அஜித் பாடலுக்கு ஆல்யா மகள் கொடுத்த ரியாக்ஷன்
இந்த நிலையில், சின்னத்திரை நாயகிகளில் அதிக சம்பளம் வாங்கும் ஆல்யா ஒரு நாளைக்கு சீரியல் நடிப்பதற்கு மாத்திரம் ரூ.50 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
சின்னத்திரை மூலம் வளர்ந்து வரும் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி, அண்மையில் சென்னையில் பல கோடி செலவில் பெரிய வீட்டை கட்டி அதில் குடியேறினர்.
சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சொந்தமாக YouTube சேனல் வைத்து நடத்தி வருகிறார்கள். அதில் குழந்தைகளுக்கு தனியாகவும் குடும்பத்திற்கு தனியாகவும் காணொளிகள் பதிவேற்றப்படுகின்றன.
அந்த வகையில், ஆல்யா- சஞ்சீவின் மகள் மற்றும் மகன் இருவரும் படுக்கையறையில் வைப் செய்யும் காணொளியை ஆல்யா அவரது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
காணொளியை பார்த்த ரசிகர்கள் குழந்தைகளுக்கு ஆதரவாக லைக்குகளையும் கருத்துக்களையும் குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |