50 லட்சம் வீட்டுக்கு இத்தணை லட்சம் வரி கட்டணுமா? அருணா அவிழ்த்து விட்ட உண்மை-ஷாக்கில் நெட்டிசன்கள்
50 லட்சம் வீட்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் வரி கட்ட வேண்டும் என தொலைக்காட்சி போட்ட கண்டிஷனால் போட்டியாளர் ஒருவர் ஏமாற்றமடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஓபனாக பேசியுள்ளார்.
சூப்பர் சிங்கர் அருணா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அருணா ரவீந்திரன் (அருணா சிவாயா) தெரிவு செய்யப்பட்டார்.
இதற்காக அருணாவிற்கு 60 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது. அதோடு பரிசுத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. 2ஆவது பரிசு பிரியா ஜெர்சனுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பிரசன்னா ஆதிசேஷாவிற்கு ரூ.5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
சினிமா மட்டுமின்றி பக்தி பாடல்கள் பாடுவதில் ஆர்வம் கொண்ட அருணாவிற்கு பரிசாக 50 லட்சம் மதிப்பிலான வீடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில், இதுவரையில் அருணாவிற்கு வீடு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
50 லட்சம் வீட்டுக்கு 15 லட்சம் வரியா?
இது குறித்து அருணா பேட்டி கொடுத்த பொழுது, “சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றதற்காக 60 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக கொடுக்கப்பட்டது. அதற்கான வரி பணத்தை நாங்கள் இதுவரையில் கொடுக்க முடியவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை செலுத்தி வருகிறோம்.
ஏனெனின் அவர்கள் எங்களிடம் வரிப்பணமாக 15 லட்சம் கேட்டார்கள். இது போன்று ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையானது உடனே அவர்களை சென்றடையும் வகையில் பரிசு தொகையோ, வீடோ இருக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும் வகையில் இருக்கக் கூடாது..” எனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினரும் சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அதில் செந்தில் கணேஷ் வெற்றி பெற்றார். அவருக்கு ரூ.50 லட்சத்திற்கான வீடு பரிசாக கொடுக்கப்பட்டது.
கடந்த 8 சீசன்கள் முடிந்தவடைந்த போதிலும் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னராக ஆண்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டனர். கடைசியாக இவர் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |