நரக வாழ்க்கை... அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணுகாந்த்
நடிகர் விஷ்ணுகாந்த் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து ஒரு அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
காதல் திருமணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரஜினி, கோகுலத்தில் சீதை, என்றென்றும் புன்னகை, சிப்பிக்குள் முத்து, ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகர் விஷ்ணுகாந்த்.
“சிப்பிக்குள் முத்து” என்ற சீரியலில் நடிக்கும் போது அவருடன் சேர்ந்து நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்து தற்போது இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது.
இருந்த போதிலும் இவர்களுக்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து இருந்து வருகிறார்கள்.
மேலும் இவர்களின் பிரிவை உறுதிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து திருமணத்தின் போது ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர்.
இந்த நிலையில் இருவர் பக்கங்களில் இருக்கும் நியாயங்களை சமூக வலைத்தளங்களில் பேட்டிகளாகவும், வீடியோக்களாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.
சமியுக்தாவிற்கான மற்றுமொரு பதிலடி
இவர்களின் பிரிவு குறித்து பலர் கேள்வியெழுப்பி வந்தார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக,“ சமியுக்தா என்னை திருமணம் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்னர் அவருடன் இணைந்து நடித்த நடிகருடன் தொடர்பில் இருந்தார்.” என்பதனை ஒரு ஓடியோவின் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து ,“ விஷ்ணுகாந்த் என்னிடம் தகாத முறையில் தான் நடந்து கொள்வார். இதனால் என்னால் சரியாக மலம் கழிக்கக் கூட முடியவில்லை. ” என நடிகை சமியுக்தா அவருடைய தாய் தந்தையருடன் வந்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்கள்.
மேலும் நடிகர் விஷ்ணுகாந்த் தற்போது அவரின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,“ ஒருவரை நம்பி என் திருமண வாழ்க்கையை தொடங்கிய சில நாட்களுக்குள் அந்த பொய்யான, நரக வாழ்க்கையில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள்,“இதெல்லாம் சமியுக்தாவிற்கான பதிலடியா? என தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.