எல்லைமீறிய சம்யுக்தா விஷ்ணுகாந்த் பிரச்சினை! செக்ஸ்யூவல் டார்ச்சர் செய்தாரா?
சீரியல் நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணுகாந்தின் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
சீரியல் நடிகை சம்யுக்தா
சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் 8 மாதங்கள் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் செய்த இரண்டு மாதங்களின் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
இருதரப்பினரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்கியதோடு, மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
சம்யுக்தா விஷ்ணுகாந்த் அந்தரங்க விடயத்தில் தன்னை டார்ச்சர் செய்வதாக கூறினார். இந்நிலையில் விஷ்ணுகாந்த் வேறொரு ஆடியோவை வெளியிட்டிருந்தார்.
அதாவது சம்யுக்தா தன்னை திருமணம் செய்துவிட்டு வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்த நபர் விஜே ரவி என்று குற்றம் சாட்டினார்.
மேலும் குறித்த ஆடியோவில் சம்யுக்தா வேறொரு நபருடன் பேசியுள்ளார். அதில் விஜே ரவியை காதலித்தேன் என்றும் அவர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று பல தகவல்களை வெளிப்படையாக ஆடியோவில் கூறியிருந்தார்.
விஜே ரவியின் பதில் என்ன?
தற்போது விஜே ரவி கூறுகையில், எனது குடும்பத்தினர் என்னை நன்றாகவே வளர்த்துள்ளனர். நான் அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தேனா? என்றும் தனக்கு 470 கே ஃபாலேவர்ஸ் இருக்கின்றனர்... அதில் எந்த பெண்ணையாவது தனியாக அழைத்து தவறாக நடத்தினேன் என்று கூறச் சொல்லுங்கள்.
நான் சகோதரன் போன்றே பழகியிருக்கிறேன்... மேலும் இந்த நிலைக்கு வருவதற்கு தான் 6 வருடம் கஷ்டப்பட்டுள்ளதாகவும், என்னை சுற்றி இருப்பவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும்... நான் யாருக்கும் தெளிவு படுத்த அவசியம் இல்லை என்றும் சொந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு மற்றவர்களை வீழ்த்த யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு கர்மா பதில் சொல்லும் என்றும் பலரும் தனக்காக சப்போட்டாக உள்ளனர் அதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார். மேலும் விஜே ரவியின் ரசிகர்கள், பலரும் சம்யுக்தாவை சத்தம் போட்டு பல பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
சம்யுக்தாவின் தற்போதைய பதிவு
இந்நிலையில் சம்யுக்தா தனக்கு ஆதராவாக கருத்து தெரிவித்திருக்கும் சிலரின் பதிவுகளை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு மாறி மாறி ஒருவரையொருவர் பதிவு வெளியிட்டு இருப்பது பிரச்சினை முடியாமல் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.