தங்கம் விலை அதிரடி சரிவு - நகை பிரியர்கள் மகிழ்ச்சி!
நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தங்க விலை சரிவை பதிவு செய்துள்ள நிலையில், இன்றைய (செப்டம்பர் 15) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்றும் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

நேற்று செப்டம்பர் 14ஆம் தேதி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125க்கும், ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்றும் தங்கம் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்க நகைகள் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மற்றும் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதன்படி, இன்று 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040க்கும், ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், 18 காரட் தங்கம் விலையிலும் சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.11,810க்கும், ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.94,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |