ரயில் பெட்டி மீது ஏறிய மாணவனின் செயல்! பரிதாபமாக உயிரிழந்த சோகம்
மதுரையில் ரயில் மீது ஏறி விளையாடியபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் மேலே விபரீத விளையாட்டு
மதுரை மீனாம்பாள்புரம் அருகே முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் விக்னேஸ்வர் (17). கடந்த ஞாயிற்று கிழமை தனது இரண்டு நண்பர்களுடன் கூடல்நகர் ரயில் நிலையம் பகுதிக்கு விளையாட வந்துள்ளார்.
அப்போது கூடல் நகர் ரயில் நிலைய ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோச் எண்.14269 பயணிகள் ரயில் பெட்டியின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த மின்சார வயர் மீது கை பட்டு தூக்கி கீழே வீசப்பட்டுள்ளார். இதனை கண்ட சக நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையி்ல், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
