தடுப்பூசி காரணமில்லை! இப்படியும் கூட நடந்திருக்கலாம்- விவேக் மரணத்திற்கு சீமான் அளித்த பதில்
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவும் நிலையில், அவரது மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதே அதற்கு காரணம் என மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டி வருவதாலும், இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களாலும் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.
ஆனால், நான் விசாரித்தவரை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு பிரச்சினை இருந்துள்ளது. ஒருவேளை ஊசி போட்டதால் கூடுதலாக வந்திருக்கலாமே தவிர தடுப்பூசியே காரணமில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.