இந்த விலங்குகள் கனவில் வருதா? வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்க போகுதுன்னு அர்த்தம்
மனிதர்களாக பிறந்த அனைவருக்கு தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் தான்.அறிவியல் ஆய்வுகளின் பிரகாரம் சில விலங்குகளுக்கும் கூட கனவு தோன்றும் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும் துள்ளியமான காரணம் சொல்லமுடியாத சில விடயங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது என்பததை கனவுகள் பறைசாற்றுகின்றன.

நாம் தூங்கும் போது வரும் கனவுகள் சிலருக்கு நினைவில் இருக்கும்.சிலருக்கு இருக்காது. ஆனால் புராணங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி கனவுகள் குறிப்பிட்ட விடயங்களை எச்சரிக்கின்ற தன்மை கொண்டவை என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில விலங்குகளை கனவில் காணப்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இது குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிர்ஷ்டம் தரும் கனவுகள்
பசு - இந்து மதத்தில் பசு மாடு என்பது மிகவும் புனிதமான விலங்காகவும், லட்சுமி தேவியின் மறு வடிவமாககவும் கருதப்படுகிறது. பசுவை கனவில் காண்பது நிதி ஆதாயத்தைக் குறிக்கிறது. குறிப்பான வெள்ளை பசுவை கனவில் காண்கின்றீர்கள் என்றால், அது பேரதிஷ்டம்தை கொடுக்கப்போகின்றது என்றே அர்த்தம்.
யானை - கனவில் யானையைப் பார்ப்பதும் பெரும் அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது. குறிப்பாக யானை குளிப்பது போல கனவு வருவது, பணப் பிரச்சனைகள் மற்றும் நீண்ட கால கடன் தொல்லைகள் முடிவுக்கு வரபோவதன் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

பாம்பை - நிஜ வாழ்க்கையில் பாம்புகள் மிகவும் ஆபத்தான உயிரினமாக பார்க்கப்பட்டாலும், கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில் இது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக வெள்ளை நிற பாம்புகளை கணவில் காண்பது வாழ்வில் செல்வ செழிப்பை கொடுக்கும் என நம்பப்படுகின்றது. மேலும், தங்க நிற அல்லது அமைதியான நாகப்பாம்பை கனவில் பார்ப்பதும் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும்.
மீன்- இந்து மதத்தின் பிரகாரம் மீன்களும் லட்சுமி தேவியுடன் தொடர்புடையதாக அறியப்படுகின்றது. கனவில் வண்ணமயமான மீன்களை பார்ப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
குதிரை - குதிரை ஆற்றலின் அடையாளமான கருதப்படுகின்றது. எனவே குதிரையை கனவில் பார்ப்பது நீண்ட கால உழைப்புக்கு வெற்றிகரமான பலன் கொடுக்கப்போகின்றது என்று அர்த்தம். வெள்ளை குதிரையில் சவாரி செய்வது போன்ற கனவு அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

சிங்கம் அல்லது புலி - கனவில் சிங்கம் அல்லது புலியை காண்பதால், தலைமை பொறுப்புகள் உங்களை தேடி வரப்போகின்றது என்று அர்த்தம்.
மயில் - கனவில் மயில் வருகின்றது என்றால் முருக பெருமானின் முழுமையான ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைத்துள்ளது என்பதையும், வாழ்வில் நல்ல விடயங்கள் தேடி வரப்போகின்றது என்பதையும் குறிக்கின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |