ரயில்களில் ஏன் இந்த வளையம் மாட்டி வைக்கிறார்கள் தெரியுமா?
பொதுவாக இந்தியா போன்ற அதிக மக்கள் செரிந்து வாழும் நாடுகளில் போக்குவரத்திற்காக புகையிரதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த புகையிரதங்களில் கட்டணம் குறைவு, நிறைய மக்கள் பயணிக்கும் வசதிகள், மலசலக்கூட வசதிகள், இயற்கை அழகை பார்க்கலாம் உள்ளிட்ட பல வசதிகளை பயணிகள் பெற்றுக் கொள்ளலாம்.
அதே சமயம், புகையிரதங்களில் பயன்படுத்தப்படும் சில சமிஞ்சை குறியீடுகள் மற்றும் அடையாளங்கள் ஆகியவற்றிற்கான விளக்கங்களை தெரிந்து வைத்திருந்தால் அது பயணிகளுக்கு இலகுவாக இருக்கும்.
அந்த வகையில், புகையிரதங்களில் முன்னாள் ஒரு இரும்பு வளையம் பொருத்தப்பட்டிருக்கும். அதற்கான உண்மையான காரணம் என்ன பலரும் சிந்தித்திருப்பார்கள். அப்படியானால் அதற்கான முழு விளக்கத்தையும் எமது பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
இரும்பு வளையத்திற்கான காரணம்

1. ஒரு குறிப்பிட்ட இரவில் முன்னாள் ரயில் பாதை கதவுகள் மூடப்பட்டிருந்தால் அதற்கான சாவிகள் இந்த இரும்பு கம்பியில் தான் இணையப்பட்டிருக்குமாம்.
2. ரயிலானது ஒரு நிலையத்தை அடையும் போது அங்குள்ள ஓட்டுநர் முந்தைய ரயில் நிலையத்திலிருந்து கொண்டு வந்த டோக்கன்களை அந்த வளையத்தில் மாட்டி வைப்பார். இன்னொரு நிலையம் சென்றதும் அங்குள்ள அதிகாரிகளுக்கு அதனை கொடுப்பார்.
3. அதன் பின்னர், அடுத்த நிலையத்திற்குச் செல்ல அனுமதிக்கான புதிய டோக்கனை பெற்று மீண்டும் அதே இடத்தில் மாட்டி வைப்பார்.

4. ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் எதிராக வரும் பொழுது இப்படி வாங்கும் டோக்கன் உதவியாக இருக்கும். டோக்கன் வாங்கிய ரயில்கள் மாத்திரமே பாதையில் பயணிக்க அனுமதி கொடுக்கப்படுகின்றன.
5. ரயில்கள் முழுமையாக நிற்பதை தவிர்ப்பதற்காகவும் இருந்த வசதி அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
6. வளையத்தின் ஒரு புறத்தில் சின்னதாக ஒரு பிரம்பு பெட்டி பொறுத்தப்பட்டிருக்கும். அதற்கு உள்ளே இரும்பு சாவி வைக்கப்பட்டிருக்கும். இதனை பயன்படுத்தி ரயில்வே கேட் லாக்கை திறக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |