செத்து போய் கிடக்கும் நாவிற்கு காரசாரமான கனவா ஸ்பெஷல் ரெசிபி.. இனி ஹோட்டல் தேவையில்லை!
பொதுவாக கடலுணவுகள் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சாப்பாடு.
இதனை பெரியவர்களை விட சிறியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகளில் இதுவும் ஒன்று.
கடலுணவுகளில் வெளியில் வாங்கி சாப்பிடுவதனை விட ரெசிபி தெரிந்து கொண்டு ஹோட்டலை விட வீட்டில் சுவையாக சமைக்கலாம்.
அந்தவகையில் காரசாரமான கனவா மீன் மசாலா எவ்வாறு செய்வது என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கனவா மீன் - அரை கிலோ
- வெங்காயம் - 1 சிறியது
- சின்ன வெங்காயம் - 10
- தக்காளி - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 1
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- சீரக தூள் - அரை தேக்கரண்டி
- தனியா தூள் - 1 தேக்கரண்டி
- மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
- எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்
- கறிவேப்பிலை கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
கனவா மீன் சமைக்கும் செய்முறை
சமையலுக்கு தேவையான காய்கறிகளை நன்றாக கழுவி சுத்தமான கத்தியால் நறுக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் கனவா மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவிய பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து சுமார் 30 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான பொருட்களை போட்டு வதக்கி கொள்ளுங்கள்.
பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கி, அதில், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள் ஆகிய மசாலாக்களை கலந்து விடவும். பச்சை வாசனை போகும் வரை கடாயை கிண்டி கொண்டே இருக்கவும்.
மசாலா வாசனை சென்றதும் ஊறவைத்த கனவா மீனை சேர்த்து நன்றாக கலந்து விட்டு 10 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.
இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கனவா மீன் மசாலா தயார்!