வெடித்து சிதறிய எரிமலையில் ஹாட் டாக் சமைத்து சாப்பிடும் விஞ்ஞானிகள்! மில்லியன் பேரை வாய்ப்பிளக்க செய்த காட்சி
சுமார் 900 ஆண்டுகளுக்கு பின்னர் Fagradalsfjall என்னும் எரிமலை ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரேக்யூவீக்கில் இருந்து தென்மேற்கு திசையில் 30 கி.மீ தொலைவில் வெடித்து சிதறியது. Fagradalsfjall என்னும் இந்த எரிமலை வெடிப்பால அந்நாட்டில் இதுவரை சுமார் 40,000 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இந்த எரிமலை வெடிப்பதற்கு பல மணி நேரம் முன்னதாக 12 கி.மீ தொலைவில் 3.1 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.
Scientists use volcanic lava to cook sausages pic.twitter.com/DCnOxbbamc
— Reuters (@Reuters) March 23, 2021
இந்த நிலையில் எரிமலை வெடித்து அதி இருந்து வழிந்து வந்த எரிமலை குழம்பில் (லாவா) விஞ்ஞானிகள் அமெரிக்க உணவான ஹாட் டாக் சமைத்துள்ளனர்.
மேலும் சுமார் 900 ஆண்டுகள் கழித்து வெடித்த எரிமலை நெருப்பு குழம்பில் உணவு சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற விழிப்புணர்வையும் விஞ்ஞானிகள் ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.