UPI-ல் பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
உங்களது யுபிஐ வரம்பை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. 10 ரூபாய் பண பரிவர்த்தனைக்குக் கூட யுபிஐ பயன்படத்தப்படுகின்றது. ஆனால் இப்படி யுபிஐ பணம் செலுத்தினால் தெரியாமலேயே செலவு அதிகரிக்கும்.
எஸ்பிஐ-யின் திடீர் முடிவு
முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது பயனர்களுக்காக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஒரு வரம்பை நிர்ணயித்துள்ளது. அதை உங்களது தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.
தேவையற்ற செலவுகளை தவிர்க்க எஸ்பிஐ யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது. இதன் கூலம் உங்களு்ககு பிடித்தவாறு யுபிஐ பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளை அமைத்துக் கொள்ளலாம்.
யுபிஐ மூலம் ஒரு நபர் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூஇ ஒரு லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம். சில வங்கிகள் இதை விடக்குறைவான பரிவர்த்தனைக்கு மட்டுமே அனுமதிக்கின்றது.
வரம்பை எப்படி மாற்றுவது?
எஸ்பிஐ யுபிஐ வரம்பைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ யோனோ செயலி அல்லது நெட் பேங்கிங்கைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு இந்த பழிமுறைகளைப் பின்பற்றினால் போதுமாம்.
முதலில் யோனோ நெட் பேங்கில் உள்நுழைய வேண்டும். யுபிஐ பரிவர்த்தனை வரம்பு அமைப்பை தேர்ந்தெடுத்து, கடவுச்சொல்லை உள்ளீடு சரிபார்த்து புதிய வரம்பை மாற்றலாம்.
உதாரணமாக தற்போது உங்கள் ரூ.50 ஆயிரம் ரூபாய் என்றால் எவ்வளவு வேண்டுமோ அதை உள்ளிட்டு சமர்ப்பி என்பதை க்ளிக் செய்யவும். ஓடிபைியை சரிபார்ப்பை செய்து புதிய யுபிஐ வரம்பு அமலுக்கு வரும்
யுபிஐ வரம்பை அமைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் செய்யும் பரிவர்த்தனைகளின் மீது உங்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கும். தேவையற்ற செல்வு கட்டுக்குள் வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |