2025 ம் ஆண்டளவில் சனிக்கோளின் வளையம் மறையும் வாய்ப்பு உள்ளதா? ஆராய்ச்சியாளார்களின் தகவல்
2025 க்கு பிறகு சனிக் கோளைச் சுற்றி இருக்கும் வளையம் நம்மால் பார்க்க முடியாமல் போகும் அளவிற்கு மறைந்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சனிக்கோள்
பொதுவாக சூரிய மண்டலத்தில் ஒரு சூரியன், அதை சுற்றி 8 கிரகங்கள் சூழன்றுக்கொண்டு இருக்கும். அதில் பெரியது ஜுபிட்டர். சிறியது மெர்குரி ஆகும்.
சனி கோளைச் சுற்றி வளையங்கள் இருக்கும். சமீபத்திய ஆய்வு படி 2025 க்கு பிறகு சனிக் கோளைச் சுற்றி இருக்கும் வளையங்கள் மறைந்து போகலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சனியை சுற்றிறியுள்ள வளையம் நமக்கு வளையம் போல தெரிந்தாலும் அது வளையம் அல்ல. இந்த கோளை சுற்றி ஏராளமான பனிப்பாறைகள், பாறை துகள்கள் மிதந்துகொண்டு இருக்கின்றன.
இவை தான் கூட்டாக நமக்கு ஒரு வளையம் போலவும் தட்டு போலவும் தெரிகிறது. சனி பூமியுடன் தற்போது 9 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. அதனால் நமக்கு இப்போது அந்த வளையம் தெரிகிறது.
2024 ஆம் ஆண்டில், இந்த கோணம் சுமார் 3.7 டிகிரியாகக் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு வருடம் கழித்து,2025 இல் பூமியிலிருந்து சனி விலகிச் செல்வதால், சனியின் அச்சு அதன் தற்போதைய சாய்ந்த நிலையில் இருந்து செங்குத்து நிலையைப் பெறும்.
அதாவது பூமியும் சனியும் ஒரே கோணத்தில் இருக்கும். இதனால் சனியை சுற்றி இருக்கும் பாறைக்குழுக்கள் நிறைந்த வளையம் பரவலாக இல்லாமல் பூமிக்கு இணையாக ஒரு மெல்லிய கிடைமட்ட கோடு போல தோற்றமளிக்கும்.
இந்த காட்சி மாயை காரணமாக 2025 இல் இருந்து சனியின் வளையம் நம் கண்ணனுக்கு புலப்படாது. இந்த நிகழ்வு 2032 வரை நீடிக்கும்.
அதன் பின்னர் தான் வளையங்களின் அடிப்பகுதி நமது கண்களுக்கு வெளிப்படும் என்று சமீபத்திய ஆய்வுகளின் படி விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |