வருடம் முழுவதும் மழை பெய்யும் நகரம்.. எங்குள்ளது தெரியுமா? பலரும் அறியாத தகவல்கள்
பொதுவாக பூமியிலுள்ள அனைத்து ஊர்களும் தனித்தனி காலநிலைகளை கொண்டிருக்கும்.
அந்த வகையில் ஒரு வருடத்திற்கு மழைக்காலம், வெயில் காலம், குளிர் காலம் என மூன்று காலங்கள் வரும். சில மாதங்கள் வெளியில் அடித்தால் சில மாதங்கள் மழை பெய்யும் இது தான் இயற்கையின் நியதி.
இப்படியொரு நிலையில், வருடம் முழுவதும் ஒரு நகரில் மழை பெய்கிறது என்றால் அது அதிர்ச்சியாக இருக்கிறது. வருடம் முழுவதும் மதிய 2 மணிக்கு மேல் மழை பொழியும் நகரம் தான் பெலேம்.
இந்த நகரம் பிரேசிலில் இருக்கிறது. இங்குள்ள முதல் சிறப்பாக துறைமுகம் பார்க்கப்படுகிறது. பெலேம் நகரம் சிறிய தீவு ஒன்றில் அமைந்துள்ளது. இந்த நகரமானது 1616 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
மேலும் பெலேம் நகரில் மழையுடன் சேர்ந்து வாழ மில்லியன் கணக்கான மக்கள் இருக்கிறார்கள். இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட பெலேம் நகரம் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பெலேம் நகரம்
1. பெலேம் நகரில் வானளாவிய கட்டடிங்கள் பல உள்ளன. கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்ட ஆலயங்களையும் இங்கு காணலாம். உலகிலேயே மிக பிரபலமான மழைக்காடுகளுக்கு நடுவில் இந்நகரம் அமைந்திருப்பதால் தினமும் மழை பெய்யும்.
2. காலை வேளைகளில் பெரும்பாலும் மழை இருக்காது. மதியம் 2 மணிக்கு மேல் மழை தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பிக்கும். தினமும் மழை பொழிவதால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு நகரம் முழுவதும் தண்ணீர் தேங்குகிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
3. பிரமிக்க வைக்கும் வரலாற்று இடங்கள், வியப்பூட்டும் கலாச்சாரம், வானமே அசந்து நிற்கும் இயற்கை அழகு இப்படி பல சுவாரஸ்யங்கள் இந்த பெலேம் நகரில் இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |