டிசம்பர் 11 முதல் சனியின் நேரடி பயணம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!
Saturn Turns Direct on December 11: ஜோதிடத்தில் சனிபகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறார்.மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும்போது சனி மிகவும் மெதுவாகவே தனது பயணத்தை மேற்கொள்கிறார்.
ஒருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப அவருக்கு நன்மைகளையும் சவால்களையும் வழங்குபவர் சனிபகவான் என்பது ஜோதிட நம்பிக்கை.இவர் ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருப்பார்.

அந்த வகையில், சனிபகவானின் தற்போதைய கிரகப் பெயர்ச்சி ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 11ஆம் தேதி மீன ராசியில் சனிபகவான் தனது வக்ரப் பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் நேர்கதியில் பயணிக்கத் தொடங்குகிறார்.இந்த நிலை ஜூன் 2027 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனிபகவானின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினாலும் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார் எனவும் இவர்களுக்கான சிறப்பு பலன்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நேரடி இயக்கம் புதிய வாய்ப்புகளையும் கூடுதல் பொறுப்புகளையும் கொடுக்கும்.குறிப்பாக, தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும்.
நீண்டகாலமாக வேலை தேடுபவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்க அதிக வாய்புள்ளது. ஏற்கனவே பணியாற்றுபவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கும் சாதகமான வாய்ப்புகள் அமையும். குறிப்பாக நிதி நிலையில சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் இயக்க மாற்றம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பணியிடத்தில் நீண்டகாலமாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. பதவி உயர்வு, புதிய வேலைவாய்ப்பு மற்றும் கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
போட்டிப் பரீட்சைகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இது சாதகமான காலமாக அமையும்.வெளிநாட்டுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்ர நிவர்த்தி தொழில் மற்றும் பொருளாதார விடயங்களில் புதிய நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.
நீண்டகாலமாகத் தாமதமடைந்த பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பணியிடத்தில் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், தொழில்சார் பொறுப்புகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.
சுயதொழில் மற்றும் வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்குப் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகத் தொடர்புகள் கிடைக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராயவும், சேமிப்பை மேம்படுத்தவும் ஏற்ற காலமாக அமையும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |