விமானப் பயணத்தின்போது ஏன் Airplane Mode அவசியம்?
Why Should You Switch Your Phone to Airplane Mode on a Plane : நீண்ட தூரப் பயணங்களை விரைவாக மேற்கொள்ள விமானப் பயணம் பெரிதும் உதவுகிறது என்பது அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் விமானத்தில் ஏறியதும் பயணிகள் தங்களது கைபேசி, டேப்லெட், மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களை அணைக்கவோ அல்லது Airplane Mode-க்கு மாற்றவோ அறிவுறுத்தப்படுகிறார்கள்.இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பெரும்பாலானவர்கள் போதிய விளக்கம் இருப்பதில்லை.

Airplane Mode என்றால் என்ன? ஏன் விடமானப்பயனங்களின் போது Airplane Mode யை ஆன் செய்ய வேண்டியது அவசியம் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
Airplane Mode என்றால் என்ன?
கைபேசி அல்லது மடிக்கணினியின் Network Settings மூலம் Airplane Mode-ஐ இயக்கலாம். இதனைச் செயல்படுத்தியதும், சாதனம் செல்லுலார் நெட்வொர்க் சிக்னல்களை அனுப்புவது நிறுத்தப்படும்.இதனால் வழக்கமான தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பெற முடியாது.

பொதுவாக Wi-Fi இணைப்பும் தானாகவே துண்டிக்கப்படும். எனினும், தேவையெனில் Wi-Fi மற்றும் Bluetooth வசதிகளைத் தனியாக மீண்டும் இயக்கிப் பயன்படுத்த முடியும்.
விமானத்தில் ஏன் Airplane Mode அவசியம்?
மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைகள் விமானத்தின் தகவல் தொடர்பு மற்றும் வழிகாட்டல் அமைப்புகளில் மின்காந்தக் குறுக்கீடுகளை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, விமானி தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடனும் தொடர்புகொள்வதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், விமானத்தில் உள்ள பல பயணிகளின் சாதனங்கள் ஒரே நேரத்தில் செல்லுலார் சிக்னல்களை வெளியிடும்போது, அவற்றின் ஒட்டுமொத்த தாக்கமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

FAA வழங்கும் வழிகாட்டுதல்கள்
அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமான FAA (Federal Aviation Administration), விமானத்தில் செல்லுலார் இணைப்பைப் பயன்படுத்துவது தொடர்பாகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதிக உயரத்தில் பயணிக்கும்போது கைபேசிகளின் சிக்னல்கள் பல தரைநிலை செல் கோபுரங்களை ஒரே நேரத்தில் சென்றடையக்கூடும்.இதனால் தரைவழி செல்லுலார் சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே, விமானப் பயணத்தின்போது பாதுகாப்பான தகவல் தொடர்பை உறுதிப்படுத்தவும், சாத்தியமான குறுக்கீடுகளைத் தவிர்க்கவும் மின்னணு சாதனங்களை Airplane Mode-ல் வைத்திருப்பது அவசியமாகிறது.
இருப்பினும், விமானத்தில் அனுமதிக்கப்பட்ட Wi-Fi மற்றும் Bluetooth வசதிகளை விமானப் பணியாளர்களின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |