ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி - இனி 2 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு அள்ள அள்ள குறையாது!
கடந்த மே 17 முதல் அக்டோபர் 9 வரை சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ரிஷபம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு ஆகிய 4 ராசிகளுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகின்றது.

சனிப்பெயர்ச்சி
ஜோதிட சாஸ்த்திரன்படி சனி கிரகம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில், சனி பகவான் கடந்த மே 17 ஆம் தேதி அன்று புதனின் ஆதிக்கம் நிறைந்த ரேவதி நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சியாகி உள்ளார். இங்கு அவர் அக்டோபர் 09 வரை நீடிக்க உள்ளார்.

இந்த பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் வேலை இடத்தில் பதவி உயர்வையும், அள்ள அள்ள குறையாத செல்வத்தையும் மகிழ்ச்சியையும் வழங்க இருக்கிறது.

ரிஷபம்
- பொருளாதார முன்னேற்றம் மற்றும் வருமான உயர்வு ஏற்படும்.
- நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
- சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
- வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.
- தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் சாத்தியம்.
- சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
- திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு உள்ளது.
மிதுனம்
- தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
- நீண்டநாள் இழுபறியாக இருந்த நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடிவடையலாம்.
- குடும்பப் பிரச்சனைகள் குறைந்து அமைதி நிலவும்.
- மன அழுத்தம் நீங்கி நிம்மதி அதிகரிக்கும்.
- வெளிநாட்டு பயணம் அல்லது அதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.
துலா
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு அதிகரிக்கும்.
- நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் நிறைவேறும்.
- புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
- வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.
- கூடுதல் வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும்.
- வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு
- வருமானம் அதிகரிக்க புதிய வாய்ப்புகள் உருவாகும். பணவரவு மற்றும் சேமிப்பு உயரக்கூடும்.
- புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் சாதகமான வாய்ப்புகளைப் பெறலாம்.
- ஆரோக்கியம் மேம்பட்டு புத்துணர்ச்சி அதிகரிக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை நிலவும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடைந்து அன்யோன்யம் அதிகரிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).