சூரியன்–சனி எதிரெதிர் நிலை: இந்த 3 ராசிகளுக்கு இன்று ராஜயோகம் தான்!
ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் கர்மவினை மற்றும் செயல்களுக்கு ஏற்ப வரங்களையும் தண்டனைகளையும் வழங்கும் நீதியின் கிரகமாக சனி கருதப்படுகிறது.
நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாகச் சஞ்சரிக்கும் சனி, ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருக்கும். தற்போது சனிபகவான் மீன ராசியில் வக்ர நிலையில் இருந்து, பல்வேறு கிரகங்களுடன் வெவ்வேறு நிலைகளில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

அந்தவகையில், அக்டோபர் 04 ஆம் திகதி (இன்று) சூரியனும் சனியும் எதிரெதிர் நிலையில் அமைய உள்ளனர். ‘பிரதியுதி’ எனப்படும் இந்த கிரக அமைப்பு சில ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது, சூரியனும் சனியும் ராசி மண்டலத்தில் ஒன்றுக்கொன்று நேர் எதிரே அமையும். இந்த அரிய கிரக அமைப்பால் நற்பலன்களைப் பெறப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது. புதிய வாய்ப்புகள், பணியிடத்தில் அங்கீகாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காணலாம். பணத்தைச் சேமிப்பதிலும் வெற்றி பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களின் உறவுகளில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகத் தீரலாம். நிதி நிலை மேம்படும். மூதாதையர் சொத்து கிடைக்கவும், கடன் பிரச்சினைகள் குறையவும் வாய்ப்புள்ளது.
மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறுவதால் பொருளாதார நிலையும் சேமிப்பும் அதிகரிக்கலாம். இதன் மூலம் நீண்டகால இலக்குகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான சூழ்நிலைகள் மற்றும் சவால்களில் இருந்து நிம்மதி கிடைக்கலாம். செயல்திறன் அதிகரித்து, முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
வாழ்க்கைத்துணையுடன் இனிமையான நேரத்தை செலவிட முடியும். பணியிடத்தில் நல்ல பலன்கள் கிடைப்பதுடன், சம்பள உயர்வு மற்றும் போனஸ் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். வியாபாரத்திற்காக தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |