செவ்வாய் பெயர்ச்சி: அடிமேல் அடி வாங்கும் ராசியினர் யார்? யார்?
கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயால் பண விவகாரம் மற்றும் உத்தியோகத்தில் எச்சரிக்கையாக இருக்கும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் பெயர்ச்சி
நவகிரகங்களில் ஒன்றாக இருக்கும் செவ்வாய் வீரம், துணிச்சல் மற்றும் வலிமை இவற்றிற்கு அதிபதியாக இருக்கின்றார். மேஷம் மற்றும் விருச்சிக ராசியினரின் அதிபதியாக இருக்கும் செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் சஞ்சரிப்பார்.
அந்த வகையில் தற்போது கடக ராசியில் பயணிக்கும் செவ்வாய், நவம்பர் 12ம் தேதி வரை நீடிக்கின்றார். கடக ராசியினருக்கு அதிபதியாக இருக்கும் சந்திரன் இருப்பதால் இரண்டு கிரகங்களின் சந்திப்பு சில சவால்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டு வருகின்றது.
இக்காலக்கட்டத்தில் எந்தெந்த ராசியினர் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது என்பதையும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினரையும் தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியில் 4ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் இந்த காலக்கட்டம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். மற்றவர்களை நம்புவதை தவிர்ப்பதுடன், உத்தியோகத்தில் எதையும் செய்யவும் கூடாதாம். எளிய வழிகளைத் தேடுவது, விதிகளுக்கு புறம்பாக நடப்பது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்.
முக்கிய முடிவு எடுப்பதில் யோசிப்பது நல்லது. திருமண வாழ்வில் சில தடைகளும் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: துவரம் பருப்பு அல்லது சிவப்பு நிற வஸ்திரங்களை செவ்வாய் கிழமைகளில் ஏழைகளுக்கு தானமாக வழங்குவது தோஷத்தை குறைக்கும்.

கடகம்
கடக ராசியினரின் உடல்நலனில் அதிக கவனம் தேவைப்படுவதுடன், ஆரோக்கியத்தில் அலட்சியம் மட்டும் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் தேவையற்ற போட்டிகள் உருவாகக்கூடும்.
பண விடயங்களில் யோசனை செய்து முடிவெடுக்கவும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் நவகிரக சன்னதியில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.

கன்னி
கன்னி ராசியில் 11வது வீட்டில் செவ்வாய் சஞ்சர்ப்பதால் இக்காலக்கட்டத்தில் ஓரளவு பணவரவு இருக்கும் என்றாலும், அதற்கு தகுந்தாற் போன்று செலவும் அதிகரிக்கும்.
பொருளாதார நிலையை சீராக வைத்திருப்பதற்கு செலவுகளை கடுமையாக கட்டுபடுத்துவது சிறந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம்.
அவசரப்பட்டு எந்தவொரு காரியத்தையும் செய்வதோ, குறுக்கு வழியில் ஆதாயம் தேடுவதோ இருப்பது நல்லது.
பரிகாரம்: நோட்டு புத்தகங்கள் ஏழை மாணவர்களுக்கு வாங்கி கொடுப்பது நல்ல பலன் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியினரின் 10ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால், உத்தியோகம் மற்றும் தொழிலில் சில சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். கூடுதல் உழைப்பு மேற்கொள்ளவும் செய்யலாம். புதிய முதலீடு தவிர்ப்பது நல்லது. மன உழைச்சலைத் தவிர்ப்பதற்கு யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது சிறந்தது.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் துர்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்ததாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |