138 நாட்களுக்கு வக்ரமாகும் சனி பகவான்: பணத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!
ஜோதிட ரீதியில் நவகிரங்களின் பெயர்ச்சியும், கிரகங்கள் இணைவதால் உருவாகும் அரிய ராஜ யோகங்களும் ராசி பலன் கணிப்பில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும். குறிப்பாக சனி பெயர்ச்சி, நட்சத்திர மாற்றம் வக்ர நிலை, சனி அஸ்டம் என அனைத்தும் ஜோதிட சாஸ்திரத்தில் அதிக முக்கியத்துவம் பெருகின்றது.
இந்நிலையில் சனி பகவான் வருகிற ஜூலை 27 ஆம் திகதி மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். வக்ர நிலையில் சனி 138 நாட்கள் வரை இருப்பார்.

அதன் தாக்கமானது சில ராசிகளுக்கு பாதக விளைவை ஏற்படுத்தினாலும் இந்த ராசிகளுக்கு உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது.
கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளதால், இவர்களின் நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாக வாய்ப்புள்ளது.
நீண்ட நாட்களாக தடைப்பட்டுவந்த விடயங்களை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும்.
தொழில் ரீதியில் அமோக முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறவுகளிடையே நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீ்ர்வு கிடைக்கும்.
துலாம்

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளதால், இதுவரையில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு தடையாக இருந்த விடயங்கள் தானாகவே நீங்கும்.
புதிய தொழிலைஆரம்பிப்பதற்கான யோகம் காணப்படுகின்றது. பணியிடத்தில் இருந்து வந்த முறன்பாடுகள் நீங்கி சுமூகமாக நிலை உருவாகும்.
பல்வேறு வழிகளிலும் புதிய வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டுவீர்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளதால், கடன் கொடுத்து நீண்ட காலமாக பெறமுடியாமல் இருந்த பணம் கைக்கு வரும்.
அதனால் புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான சிந்தனையில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். இந்த காலகட்டம் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும்.
திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |