20 ஆண்டுகளின் பின் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா! படு வைரலாகும் வீடியோ
suriya - jyothika celebrating 20 years of love : திருமணம் ஆகி 20 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது மகன் மற்றும் மகள் முன்னிலையில் மீண்டும் கிறிஸ்தவ முறைப்படி சூர்யா மற்றும் ஜோதிகா திருமணம் செய்துக்கொண்ட காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் சிறந்த ஜோடியாக வலம் வந்த இவர்கள், இன்றளவும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளனர்.

சூர்யா–ஜோதிகா
திருமணத்திற்கு முன்பு காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் இணைந்து நடித்த சூர்யா–ஜோதிகா ஜோடி, ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.
அவர்களுக்கிடையேயான இயல்பான காதல் காட்சிகளும், அற்புதமான கெமிஸ்ட்ரியும் அந்தப் படங்களை இன்றும் ரசிகர்கள் கொண்டாடுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. ஆனால் திருமணத்திற்குப் பிறகு, இருவரும் இதுவரை எந்தத் திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.

சூர்யா–ஜோதிகா மீண்டும் ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்டநாள் விருப்பமாக இருந்து வருகிறது.
இதுகுறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசிய இருவரும், "நல்ல கதையும், இருவருக்கும் பொருத்தமான கதாபாத்திரங்களும் அமைந்தால் நிச்சயமாக மீண்டும் இணைந்து நடிப்போம்" என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், திருமணம் ஆகி 20 வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தற்போது மகன் மற்றும் மகள் முன்னிலையில் மீண்டும் கிறிஸ்தவ முறைப்படி சூர்யா மற்றும் ஜோதிகா திருமணம் செய்துக்கொண்ட காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |