பிரபல திரைப்பட நடிகரின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு
காலாவதியான மருந்துக்களால் நோயாளிகள் பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள் என தென்னிந்திய நடிகரின் மகள் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் அவர் தெரிவித்துள்ளதாவது,
காலாவதியான மருந்துகள்
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த பல சேவைகளை செய்து வருகிறார்.
என்னுடைய நோயாளி ஒருவர் மருந்து வாங்குவதற்கு மருந்தகத்திற்கு சென்றுள்ளார்.
அவர் வாங்கிய 4 மருந்துகளில் 3 மருந்து காலாவதி திகதி முடிந்துபோயுள்ளது. காலாவதியான மருந்துகளை உபயோகம் செய்வதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும்.
பல மருந்தகத்தில் இவை தொடர்ந்து வருகிறது. மக்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்கும் பொருட்கள், வீட்டின் பயன்பாட்டிற்கு உள்ள மசாலா பொருட்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் காலாவதி திகதிகளை பார்த்து சோதனை செய்து வாங்குங்கள்.
தவறுகள் நடக்ககூடாது
துறைகளில் மிகவும் முக்கியமானது இந்த மருத்துவத் துறை. மருத்துவ துறைகளில் தவறுகள் நடந்தால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும்.
மருந்தகம் வைத்துள்ளவர்கள் உங்களை நம்பியும், மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து பணத்தை கொடுத்து மருந்து வாங்குகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணத்தை விட மனிதநேயம் முக்கியம் என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
Actor #sathyaraj's daughter nutritionist #divyasathyaraj's first video on #medical crimes #medicalcrimes #divyasathyaraj pic.twitter.com/7HzGkzhotm
— SS Music (@SSMusicTweet) December 22, 2022