நடிகர் சத்யராஜின் அம்மா மற்றும் மாமியாரைத் தெரியுமா? முதன்முறையாக மகள் வெளியிட்ட புகைப்படம்
பிரபல வில்லன் நடிகர் சத்யராஜின் தாய் மற்றும் மாமியாரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
1990 முதல், முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக அறியப்படுபவர், நடிகர் சத்யராஜ். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் வில்லனாக தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை தொடர்ந்தாலும், பின்னர் ஹீரோவாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்.
தற்போது இளம் நடிகர்களுடன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, 'பாகுபலி' படத்தில், இவர் நடித்த கட்டப்பா வேடம் உலக அளவில் பிரபலமானது.
இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர், அவரின் மூலம் நடிப்பால் ஈர்க்கப்பட்டு, நடிகராக மாறியவர். சினிமாவிற்கான ரெங்கராஜ் என்கிற தன்னுடைய பெயரை சத்யராஜ் என மாற்றி கொண்டார்.
நடிப்பை தாண்டி, 'வில்லாதி வில்லன்' என்கிற திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய மகன் சிபிராஜ் நடிகர் என்பதாலும், இவரது மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பதாலும் பலருக்கும் இவரது குடும்பத்தினரை பற்றி தெரியும்.
ஆனால், இவரது அம்மா, மாமியார் குறித்த புகைப்படங்கள் மற்றும் எந்த ஒரு தகவலும் வெளியானது இல்லை. ஆனால் தற்போது சத்யராஜின் மகள் முதன்முறையாக இவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள், அனைவரும் இந்த வயதிலும் சற்றும் மகன் சத்யராஜை போல் கம்பீரம் குறையாமல் இருக்கிறார் என கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும், சேர்த்து எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.