சரோஜா தேவி அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியம் என்ன தெரியுமா?
கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி, உடல்நலக்குறைவால் காலமானார்.
கன்னடத்தில் முதன்முறையாக அறிமுகமான சரோஜா தேவிக்கு முதல் படமே பாராட்டுகளை பெற்று தந்தது.
அடுத்ததாக தமிழில் சிறுவேடங்களில் நடித்து வந்தார், எம்ஜிஆருடன் இணைந்து நடித்த ”நாடோடி மன்னன்” படத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ஒரே படத்தின் மூலம் புகழ்பெற்றவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. 1960களில் மிகச்சிறந்த நடிகையாக அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
சினிமாவில் நடித்து வந்த காலத்தில் பிற நடிகர்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் கதாநாயகியாக இருந்தார்.
அம்மாவுக்கு சத்தியம்
எதிர்பாராதவிதமாக சினிமாவுக்குள் நுழைந்தார் சரோஜா தேவி, திரைத்துறைக்குள் வருவதற்கு முன் அவரது தாய் பல கட்டுப்பாடுகளை விதித்தாராம்.
அதில் முதல் கண்டீஷன், “சினிமா துறையில் இருக்கும் யாரையும் காதலிக்க கூடாது” என்பதுதானாம்.
இதை தன் மனதிற்குள் பதிந்து கொண்ட சரோஜா தேவி, யாரையும் திரைத்துறையில் காதலிக்கவில்லை- திருமணமும் செய்யவில்லை.