ட்ரெண்டிங் பாடலை பாடி அசத்திய சரிகமப புகழ் சுசாந்திகா! குவியும் லைக்குகள்
சரிகமப சீனியர் சீசன் 5- வின் டைட்டில் வின்னர் சுசாந்திகா ட்ரெண்டிங் பாடலை பாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சரிகமப வின்னர் சுசாந்திகா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளின் பட்டியலில் சரிகமப நிகழ்ச்சிக்கென தனித்துவமான இடம் காணப்படுகின்றது.

இது சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. இதில் சரிகமப சீனியர் சீசன் 5 இல் டைட்லில் வின்னராக வெற்றி வாகை சூடியவர் தான் சுசாந்திகா.
சுசாந்திகா தமிழகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போதுதான் 12ஆம் வகுப்பை முடித்துள்ளார்.

கர்நாடிக் சங்கீதம் பயின்ற இவர், முதல் முறையாக கலந்துகொண்ட நிகழ்ச்சியே இந்த சரிகமப நிகழ்ச்சிதான்.
தான் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியிலேயே டைட்டில் வின்னராகி அசத்தியிருக்கிறார். இவருக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சுசாந்திகா ட்ரெண்டிங் பாடலை பாட தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |