சரிகமப - வில் கமலை போல கெட்டப்போட்டு பாடிய இலங்கை போட்டியாளர்...ரசித்த தருணம்
இந்த வாரம் சரிகமப வில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர் சபேஷன் கமலின் கெட்டப்பில் பாடி அனைவரையும் ஈர்ந்து இருந்தார்.
சரிகமப
கடந்த வாரம் கங்கை அமரன் சுற்று நடைபெற்று முடிந்தது. கடந்த வாரம் நடைபெற்ற "கங்கை அமரன்" சுற்று வெற்றிகரமாக முடிவடைந்தது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பான இசைப் பயணத்தை நிகழ்த்தினர்.
பலரும் கோல்டன் பெர்போர்மன்ஸ் விருதுகளை பெற்றதுடன், தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார்கள். நிகழ்ச்சியின் விதிமுறைகளுக்கிணங்க, இந்த சுற்றில் இரண்டு போட்டியாளர்கள் நீக்கப்பட்டனர்.
இதன் பின்னர், ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் "தேன்கொட்டா" சுற்று இந்த வாரம் நடைபெறவுள்ளது. இந்த சுற்றில், நடுவர்கள் முதல் போட்டியாளர்கள் வரை அனைவரும் தனித்துவமான கெட்டப்புகளுடன் மேடையை அலங்கரிக்கவுள்ளனர்.
தனித் தன்மையுடன் பாடல்களை ரீகிரியேட் செய்யும் இந்த பகுதி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். போட்டியாளர் சபேஷன் நடிகர் கமலஹாசனை போலவே கெட்டப் எடுத்து, அவரது புகழ்பெற்ற பாடலை அதேபோல் பாடி ரசிகர்களை கவர்ந்தார். அந்த காட்சியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |