சரிகமப - வில் 3வது வின்னருக்கு ரசிகனால் கிடைத்த பேருதவி...லட்சத்தில் சம்பளம்
சரிகமப மேடையில் சின்னு செந்தமிழனுக்கு ரசிகனால் கிடை்த வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு யாரும் எதிர்பார்க்கதாக இருந்தது.
சரிகமப
கடந்த 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சரிகமப வின் இறுதிச்சுற்று நடந்து முடிந்தது. இதில் நான்காவது போட்டியாளராக தெரிவு செய்யப்பட்ட சின்னு செந்தமிழன் தைய தைய பாடலைப் பாடி முடித்ததும் அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது.
சின்னுவுக்கு ஒரு ரசிகர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு புதிய பைக் ஒன்றை வாங்கி பரிசாக அனுப்பி வைத்துள்ளார். அதைப்பார்த்ததும் சின்னு செந்தமிழன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.
ஒரு மெக்கானிக் செட்டில் பணிபுரிந்து வந்த சின்னு அவ்வப்போது ஏதாவது பாடல்கள் பாடி அந்த வீடியோக்களை வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமானார்.

இது ஒரு பக்கம் இன்ப அதிர்ச்சி கொடுக்க தற்போது துபாயில் இருக்கும் Haitian Middle East நிறுவனம் சின்னு செந்தமிழனுக்கு Service Engineer ஆக வேலை கொடுத்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் நடுவர் விஜய் பிரகாசின் ரசிகராவார். அவர் தான் ரசிகர் என்பதால் சின்னுவிற்கு இந்த வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அந்த Appointment கடிதத்தை பார்த்ததும் சின்னு செந்தமிழன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் என்று தான் கூற வேண்டும். அதில் அவருக்கு இந்திய மதிப்பில் 840 ஆயிரங்கள் சம்பளமாக இருந்தது.

மேலும் சின்னு உலகத்தில் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பாடலாம் வேலை செய்யும் போது பாட வாய்ப்பு கூடி வந்தால் பாடலாம் என்பதற்கான அனுமதியும் அந்த கடித்தத்தில் இருந்தது.
இதை பார்த்த ரசிகர்கள் சின்னுவிற்கு லைஃப் செட்டில்மென்ட் என கூறி பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |