சரிகமப அப்டேட்: பஸ் கண்டக்டராக மாறிய அர்ச்சனா.. யாரெல்லாம் உள்ளே இருக்காங்க தெரியுமா?
இந்த வார எபிசோட், சரிகமப தொகுப்பாளினி அர்ச்சனா டவுன் பஸ் கண்டக்டராக மாறிய காட்சி இணையவாசிகள் எதிர்ப்பார்ப்பு அதிகமாக்கியுள்ளது.
சரிகமப சீசன் 5
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய நான்கு சீசன்களை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, தற்போது ஐந்தாவது சீசனில் நகர்ந்து கொண்டிருக்கிறது. சரிகமப நிகழ்ச்சியால் பலனடைந்தவர்களின் எண்ணிக்கையும் சீசனுக்கு சீசன் அதிகமாகி வருகின்றது.
திறமையை வைத்து கொண்டு சாதிக்க துடிக்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் கனவுகளை இந்த நிகழ்ச்சி நனவாக்கிக் கொண்டிருக்கின்றது.
சரிகமப நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு வெற்றிகரமாக ஆரம்பமாகிய வேளையில், அந்த நிகழ்ச்சியில் கார்த்திக், விஜய் பிரகாஷ், ஸ்ரீனிவாஸ், சுஜாதா மோகன், சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, அபிராமி ஆகிய பிரபலங்கள் நடுவர்களாக இருந்தனர்.
அதே போன்று தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் சைந்தவி, ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். அதிலும் கடந்த வாரத்தில் பல மாதங்களுக்கு பிறகு கார்த்திக் நடுவராக வந்திருக்கிறார்.
தொகுப்பாளினி விஜே அர்ச்சனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ரெனிஷா, ராக் ஸ்டார் ரமணியம்மா, ஆதித்யா, அஷ்வந்த் போன்றவர்கள் திறமையானவர்களாக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த வார அப்டேட்
இந்த நிலையில், இந்த வாரம் Town Bus Round ஆரம்பமாகவுள்ளது. இதற்காக தொகுப்பாளினி பஸ் கண்டக்டராகவும், நடுவர்கள் பஸ் ஓட்டுநர்களாகவும், போட்டியாளர்கள் பஸில் பயணம் செய்யும் பயணிகளாகவும் இருப்பது போன்று ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த இணையவாசிகளுக்கு நடக்கவிருக்கும் வாரங்களில் Town Bus Round எப்படி இருக்கப்போகிறது என்ற ஆர்வம் அதிகமாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |