விபூதி எப்படித் தயாரிக்கப்படுகிறது தெரியுமா? முக்கிய மூலப்பொருள் இதுவா!
இந்துக்களை பொருத்தமட்டில், விபூதிக்கு முக்கிய இடம் கொடுப்படுகின்றது. குறிப்பாக சிவன் பக்தர்கள் திருநீற்றை எடுத்து மூன்று விரல்களைக் கொண்டு பட்டையாக தீட்டிக்கொள்ளும் வழக்கத்தை பின்பற்றுவார்கள்.
நெற்றியில் விபூதி பூசுவதென்பது இந்து சமயத்தின் பிரகாரம் ஒருவரின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சடங்காகவே அடையாளப்படுத்தப்படுகின்றது.
ஆனால் தினசரி பயன்படுத்தும் விபூதி எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது என்பது குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது.
குறிப்பாக இந்துக்களில் சிலருக்கு இருப்பற்றி தெரிந்திருக்காது. வாசனை கமழும் இந்த விபூதியை திருநீறு என்றும் அழைப்பார்கள்.
தெய்வீக மணம் கொண்ட இந்த விபூதியை எவ்வாறு தயாரிக்கின்றார்கள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
விபூதி எப்படி தயாராகிறது?
விபதி தயாரிப்பில் முக்கிய மூலப்பொருள் சாணம் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? ஆம் பசுவின் சாணத்தில் இருந்து தான் விபூதி தயார் செய்யப்படுகின்றது.
முதலில் சாணத்தை வட்ட வடிவில் தட்டி சுவற்றில் காய வைத்து வரட்டியை உருவாக்கி குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு வெயிலில் காயவிடுடுகின்றார்கள்.சில கிராமங்களில் இந்த வரட்டியை காயவைத்து விறகுக்கு மாற்றாகவும் பயன்படுத்துவார்கள்.
விபூதி தயாரிக்க நன்கு காயவைத்த வரட்டியுடன் நெய் மற்றும் மூலிகைப் பொருட்களான சூடம் ,ஏலக்காய் சேர்த்து நெருப்பில் போட்டு நன்றாக எரிக்கப்படுகின்றது.
இதன் முடிவில் கிடைக்கும் சாம்பலை ஆற வைத்து பத்திரமாக எடுத்து வைப்பார்கள். இதுதான் கோயில்களில் விபூதி பிரசாதமாக கொடுக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
