சரிகமப - வில் நடுவர் ஸ்ரீனிவாஸ் அனுப்பிய காணொளி: கண்ணீரில் நிரம்பிய போட்டியாளர்
சரிகமப போட்டியாளர் பவித்ராவிற்கு நடுவர் ஸ்ரீனிவாஸ் கொடுத்த சர்ப்பிரைஸ் கண்ணீரில் நிரம்ப செய்தது.
சரிகமப
கடந்த வாரம் சரிகமப வில் OLD is GoLD சுற்று நடைபெற்றது. இதில் பல போட்டியாளர்கள் பழைய பாடல்களை பாடி சிறப்பான தருணத்தை உருவாக்கினார்கள்.
இறுதிச்சுற்க்கு தற்போது ஒரு போட்டியாளர் சுஷாந்திக்கா தெரிவாகியுள்ளார். இன்னும் 11 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் இருந்து நான்கு பேர் இறுதிச்சுற்றிற்கு தெரிவு செய்யப்டுவார்கள்.
அது யாராகவும் இருக்கலாம். இந்த நிலையில் பவித்ரா பாடிய காணொளியை நடுவர் ஸ்ரீனிவாஸ் அதை பாடகி சாதனாவிற்கு அனுப்பி வைத்திருந்தார்.
கண்ணீர் விட்ட போட்டியாளர்
கடந்த வாரம் பழைய பாடல்கள் சுற்றில், பவித்ரா, 'உன்னை காணாத கண்கள் கண்ணில்லை' என்ற பாடலை மிகவும் அழகாகப் பாடினார். இதற்கு நடுவர்களிடம் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
அவரைப் பாராட்டிப் பேசிய பின்னணிப் பாடகர் மகாராஜன் பவித்ராவுக்கு உடனடியாக ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸைக் கொடுத்தார் தன்னுடைய அடுத்த பாடலில் பாடுவதற்குப் பவித்ராவுக்கு வாய்ப்பு வழங்குவதாக மேடையிலேயே அறிவித்தார்.
இதன் பின்னர் பாடகர் ஸ்ரீநிவாஸ் கொடுத்த சர்ப்ரைஸ், பவித்ராவைச் சந்தோஷத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. பவித்ரா இதற்கு முன்பு பாடிய 'அக்கம் பக்கம் யாரும் இல்லா' பாடல் வீடியோவை, ஸ்ரீநிவாஸ் பாடகி சாதனா சர்கத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
அந்த வீடியோவைப் பார்த்த சாதனா சர்கர், நிகழ்ச்சிக்கு வீடியோ கால் மூலம் இணைந்து பவித்ராவை பாராட்டினார். "பவித்ரா உங்க பாட்டைக் கேட்டு நான் மெய்மறந்து போனேன்.
உங்களுடைய குரல் ரொம்பவும் அருமையாக இருந்தது. நீங்கள் பாடிய 'அக்கம் பக்கம்' பாடல், மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தூண்டுகிறது நீங்கள் ரொம்பவும் திறமையானவர்களாக இருக்கீங்க.
ரொம்ப தைரியமான பொண்ணாகவும் இருக்கீங்க. உங்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து வெற்றி வரும்" என்று மனம் உருகி வாழ்த்தினார். இந்த எதிர்பாராத ஆசீர்வாதம் பவித்ராவின் கண்களை மீண்டும் கண்ணீரில் நிரப்பியது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |