Saregamapa: ஊருக்காக பாடிய போட்டியாளர்!கடைசியில் சரிகமப குழு செய்த பேருதவி
சரிகமபவில் தனது ஊரிற்க்காக அங்கீகாரம் தேடிய சிறுமிக்கு சரிகமப குழுவினர் உதவி செய்துள்ளனர். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தள பக்கதில் வைரலாகி இருக்கின்றது.
சரிகமப குழு
சரிகமப நிகழ்ச்சியில் மெஷா ஓடிஷன் நடைபெற்று முடிந்தது. இந்த மெஹா ஓடிஷனில் ஒவ்வொரு போட்டியாளர்களின் வாழ்க்கை பற்றி ரசிகர்களுக்கு ஒரு காணொளியாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் அம்மணம்பாக்கம் தர்ஷினி எனும் போட்டியாளரின் காணொளியும் ஒலிபரப்பாக்கப்பட்டது.
இந்த சரிகமபவில் தர்ஷினி எனும் போட்டியாளர் பாட வந்ததற்கான காரணம் தன் ஊரில் மக்கள் சிரமப்படுவதை உலகமெங்கும் கொண்டு சென்று அதன் மூலம் இந்த ஊரின் கஷ்டங்களை நீக்க வேண்டும் என்பது தான்.
இவர் அம்மணம்பாக்கம் திண்டிவனப்பகுதியில் இருந்து வருகிறார். இந்த சிறுமி தனது கிராமத்தில் இருந்து பாடசாலைக்கு சென்று படிப்பதற்கு 5 கி.மீ துரத்தில் நடந்து செல்ல வேண்டும். இந்த கிராமத்தில் இருந்து 30 பேர் இப்படி படிக்கின்றனர்.
இங்கு போக்குவரத்து வசதி இல்லாததால் அனைத்து சிறுவர்களும் பாடசாலைக்கு செல்ல சிரமப்படுகின்றர். இந்த சிறுமி இந்த போட்டியில் கலந்துகொண்டதற்கான காரணம் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பதன் மூலமாவது இந்த கிராமத்திற்கு இந்த போக்குவரத்து வசதியை செய்து கொடுப்பார்கள் என்று தான் என கூறுகின்றார்.
தற்போது இவரின் ஆசையை இந்த சரிகமப நிகழ்ச்சி நிறைவேற்றி வைத்துள்ளது. அதாவது இந்த அம்மணம்பாக்கம் ஊரிற்கு சரிகமப குழுவினர் பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து வசதியை பெற்று கொடுத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |