'ஏன் முறைக்குறீங்க' அருணின் செயலை அடித்துடைத்த விஜய் சேதுபதி! எவிக்ஷனில் சிக்குவாரா?
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பல விடயங்களை நாம் பார்க்க கூடியதாக இருந்தது. இதில் அருணை விஜய் சேதுபதி கேள்வி கேட்ட போது அவர் விஜய் சேதுபதியை முறைத்து பார்த்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. வழக்கமாக முதல் வாரத்தில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்துவிடும். ஆனால் இந்த சீசன் மட்டும் 9-வது வாரத்தில் தான் சூடுபிடித்திருந்தது.
கடந்த எட்டு வாரங்கள் சுவாரஸ்யமே இல்லாமல் சென்றுகொண்டிருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிலையில் தற்போது 17 போட்டியாளர்கள் இருந்த இந்த போட்டியில் நேற்றைய தினம் இரண்டு பெண் போட்டியாளர்களான சாச்சனா, ஆனந்தி இருவரும் வெளியேறி சென்றனர்.
அந்த வகையில் நேற்றைய எபிசோட் சுவாரஸ்யமாக இருந்தது. இந்த எபிசோட்டில் சௌந்தர்யா ஜாக்லின் இருவரும் செய்ததற்கு விஜய் சேதுபதி சரமாரியாக கேள்வி கேட்டு 'இப்படி எல்லாம் பண்ரது தப்பு நீங்க விளையாட்டை கெடுக்க வேண்டாம். அப்படி இருக்க முடியவில்லை என்றால் வெளியே வாங்க கதவை திறந்து விடுறன்' என கூறியிருந்தார்.
இதன் பின்னர் வீட்டிற்குள் கோவா கேங் பற்றி விஜய் சேதுபதி கேள்வி கேட்டு முடித்த பின்னர் ஒவ்வொருவரிடமும் யார் நன்றாக டாஸ் விளையாடினார்கள் யார் விளையாடியது உங்களுக்கு பிடிக்கவில்லை என கேட்டார்.
இதில் போட்டியாளர்கள் அனைவரும் அவரவர் கருத்தை முன்வைக்க அருண் மட்டும் மஞ்சரி மேல் இருந்த வன்மத்தை கூறி இருந்தார். விஜய் சேதுபதி கேட்ட கேள்வி இருவரை பற்றி கூற வேண்டும் என்பது தான்.
ஆனால் அருண் அதற்கு மாறாக டாஸ்க் என்ன என்பதை விளக்கிக்கொண்டிருப்பார். இந்த நிலையில் விஜய் சேதுபதி 'நான் கேட்டது இது இல்லையே நான் உங்களிடம் கேட்டது இரண்டு நபரை பற்றி டாஸ்கை பத்தி இல்லையே உங்களுக்கு இரண்டு பேர் மேல் மட்டும் கருத்து இருந்தால் கூறுங்கள் இல்லை என்றால் நீங்க உட்காருங்க அருண் என கூறினார்.
இப்படி விஜய் சேதுபதி கூறும் போது அவரை அருண் முறைத்து பார்ப்பார். அதை 'விஜய் சேதுபதி ஏன் அருண் என்னை முறைக்கிறீங்க' என கேட்டதும் 'இல்ல சேர் நான் முறைக்கல' என கூறி சமாளித்திருப்பார்.
அருணின் இந்த செயல் பற்றி சமூக வலைத்தளத்தில் மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் மக்களின் வாக்குகளில் மிகவும் குறைந்து அடிமட்டத்திற்கு தள்ளப்பட போகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |