பிக் பாஸில் வித்தியாசமான முறையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! கதறி அழுத முத்து
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் சிக்கி எலிமினேட் ஆன போட்டியாளர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கண்ணீரில் முத்துக்குமரன்
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏஞ்சல் வெர்சஸ் டெவில் டாஸ்கின் மூலம் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்தது.
இதில் சௌந்தர்யா மற்டும் ஜாக்குலின் இருவரும் டாஸ்கை சரிவர புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் ஆட்டத்தையும் கெடுத்துக்கொண்டு போட்டியில் இருந்தனர். இந்த நிலையில் இந்த போட்டியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் போட்டியை விட்டு விலகிச் செல்வார்கள்.
அந்த வகையில் வீட்டிற்குள் போட்டியாளர்கள் அதிகமாக காணப்படும் காரணத்தினால் ஒன்பதாம் வாரம் இரண்டு பேர் போட்டியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அந்த வகையில் போட்டியாளர்கள் சாச்சனா மற்றும் ஆனந்தி வெளியேற்றப்படுகிறார்கள்.
இந்த முறை எவிக்ஷன் கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்றுள்ளது. முதலில் விஜய் சேதுபதி ஆனந்தியை முதலில் வெளியேற்றுகிறார். இதனால் வீட்டில் இருந்த அனைவரும் இன்று ஒரு எவிக்ஷன் தான் என நினைத்து மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் பார்த்து சாச்சனா வெளியேற்றப்படுகிறார்.
இதனால் வீட்டில் இருந்த அனைவரும் கவலைப்படுகிறார்கள். இதில் குறிப்பாக முத்துக்குமரன் அழுது புலம்புவதை காண முடிகிறது. அதாவது என்னதான் முத்துக்குமரன் சாச்சனாவை விட்டு விலகி இருந்தாலும் அவளின் மேல் தங்கை என்ற ரீதியில் ஒரு அன்பை வைத்திருப்பார்.
சாச்சனா முத்துவிற்கு எதிராக செய்யும் வேலைகள் முத்துவிற்கு தெரிந்தாலும் முத்து சாச்சனா மீது உண்மையான அன்பு தான் வைத்திருப்பார். அந்த வகையில் சாச்சனா வெளியேறி செல்லும் போது முத்துவிற்கு அவள் மேல் இருந்த பாசம் வெளிப்படுகிறது.
மேலும் சாச்சனா வெளியே வந்து விஷால் மற்றும் முத்துக்குமரன் இருவரும் தனக்கு அண்ணன் என்ற பாசத்தை கொடுத்தார்கள் என கூறுகிறார். வெளியேறி சென்ற இரு போட்டியாளர்களும் பல விடயங்களை பேசியவாறு கண்ணீருடன் செல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவு பெறுகிறது.
பிக் பாஸில் புதிய தலைவர் தேர்வு : வாக்குகளில் மேலே வந்த மஞ்சரி தட்டி தூக்க நினைக்கும் போட்டியாளர்கள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |