ஆரம்பமாகிய சரிகமப சீசன் (5) லிட்டில் சாம்ஸ் - சிறுவர்களாகிய நடுவர்கள் Promo
சரிகமப சீசன் 5இன் லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி விரைவில் வர இருக்கின்றது. இதற்கான ப்ரமோ தற்போது வெளியாகி இருக்கின்றது.
சரிகமப
சரிகமப சீனியர் சீசன் 5 கடந்த 23ம் திகதி நடந்து முடிந்தது. இதில் டைடில் வின்னராக சுஷாந்திக்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் சரிகமப டிவி நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்களை கடந்துள்ளது.
இதில் ஐந்தாவது சீசனின் லிட்டில் சாம்ஸ் விலைவில் ஆரம்பமாகும் என பிரபல தொலைக்காட்சி மூலம் ப்ரமோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காணொளியில் முதலில் நடுவர்கள் எல்லோரும் சாரதிகளாகவும் பின்னர் சிறுவர்களாகவும் மாறி லிட்டில் சாம்ஸ்ஐ வரவேற்கின்றனர்.
மக்கள் மத்தியில் பிரபலமான இந்த நிகழ்ச்சியில் வரவிருக்கும் லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி எப்போது வரும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இதுவரை நடைபெற்ற அனைத்து லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சிகளிலுமே மக்கள் மனம் கவர்ந்த குழந்தைகள் ஏராளம். அந்த வரிசையில் யோகஸ்ரீ திவினேஷ் ருத்ரேஷ் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படி சீசன் 5இன் லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சியும் மக்களுக்கு ஒரு விருந்து கொடுக்குமா இல்லையா என்பதை காத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |