Siragadikka Aasai: வீட்டில் கதவை அடைத்த முத்து... பயத்தில் நடுங்கிய ரோகினி
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மொத்த குடும்பத்தையும் அழைத்து உண்மையை கூறுவதற்கு தயாரான நிலையில், ரோகினி அதிர்ச்சியில் இருக்கின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி குறித்த உண்மை முத்துவிற்கு தெரியவந்துள்ளது. அதாவது ரோகினியின் உண்மை ஏற்கனவே மீனாவிற்கு தெரிந்த நிலையில், தற்போது முத்துவும் இதனை அறிந்துள்ளார்.
முத்து ரோகினியின் முதல் கணவரின் உறவினரை சந்தித்த நிலையில், அவர்கள் மூலமாக இந்த எதிர்பாராத உண்மை அவருக்கு தெரியவந்துள்ளது.

இன்றைய எபிசோடில், முத்து, ரோனி பற்றிய மொத்த உண்மையையும் கூறுயதால், குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர். வழக்கம் போல் ரோகினி சிறுவயதிலேயே தனது அம்மா, அப்பா அக்காவை தத்து கொடுத்துவிட்டனர் என்று கூறுகின்றார்.
க்ரிஷ் கல்யாணி குழந்தை தான் ஆனால் என் குழந்தை இல்லை. க்ரிஷ் எனது அக்காவின் குழந்தை, நானும் அவளும் டுவின்ஸ் என கூறுகிறார். ஆனால் கடைசியில் அதெல்லாம் முத்து காணும் கனவாக காட்டப்படுகிறது.
வீட்டிற்கு வந்த முத்து
மனோஜ் க்ரிஷை அமெரிக்க தம்பதிக்கு தத்து கொடுத்தால் கிடைக்கும் 25 லட்சத்தை வாங்கி கடன் அடைப்பேன் என்று பேசியுள்ளார்.
ரோகினி தனது முதல் திருமண விடயத்தை மனோஜிடம் மட்டும் கூறுவதற்கு அவரை அழைத்தும் அவர் வராமல் இருக்கின்றார். அதன் பின்பு முத்து போதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு வந்துள்ளார்.
முத்து வீட்டிற்கு வந்து அனைவரிடமும் உண்மையை கூறுவதற்கு வீட்டில் உள்ள ஜன்னல், கதவு இவற்றினை அடைக்கின்றார். உண்மையை கூறும் போது யாரும் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகிவிடக்கூடாது என்று கூறுகின்றார். ரோகினி பெரும் பதற்றத்தில் இருக்கின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |