சரிகமப-வில் நால்வரில் தெரிவுசெய்யபட்ட 5வது இறுதிச்சுற்று போட்டியாளர் யார்?
சரிகமபவில் இறுதிச்சுற்றுக்கு ஐந்தாவது போட்டியாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசைநிகழ்ச்சியாக இருப்பது சரிகமப நிகழ்ச்சி தான். இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளரும் ஒருவருக்கொருவர் மிகவும் திறமைசாலிகள்.
இதுவரை இறுதிச்சுற்றுக்கு நான்கு போட்டியாளர்களான ஹேமித்ரா, ஸ்ரீமதி,யோகஸ்ரீ ,திவினேஷ் தெரிவாகியிருந்தனர். அடுத்த 5வது போட்டியாளர் தெரிவாக்கும் பணி கடந்த வாரம் சனிக்கிழமை ஆரம்பமாகி இருந்தது.
இந்த நிலையில் எபிசோட் சிறப்பாக முடிவடைந்தது. இந்த நிலையில் கோல்டன் பெர்போமன்ஸ் பெற்ற நான்கு போட்டியாளர்களும் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
இதில் போட்டியாளர் அபினேஷ் 5 வது இறுதிச்சுற்றுக்கு தெரிவுசெய்யப்பட்டார். தற்போது தெரிவாகிய ஐந்து இறுதிச்சுற்று போட்டியாளர்களிலுமே இறுதி வெற்றிக்கோப்பை யார் தட்டிச்செல்வார் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |