சரிகமப-வில் இந்த வாரம் பரிதாபமாக வெளியேறிய போட்டியாளர்கள்! சோகத்தில் அரங்கம்
இந்த வாரம் சரிகமப வில் நடைபெற்ற சீசன் 4 வின் லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் 4 போட்டியாளர்கள் வெளியெறி சென்றுள்ளனர்.
சரிகமப
தற்போது சரிகமப வில் தற்போது லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 4 நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 26 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர். கடந்த இரு சுற்றுக்கள் நடந்து முடிந்து தற்போது டூயட் சுற்று சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த டூயட் வாரத்திற்கான 5000 மதிப்புள்ள ஸ்பெஷல் கிஃப்ட் டம்பர் திவினேஷ் மற்றும் தியா நயனன் ஆகிய இரு போட்டியாளரும் பெற்றுக் கொண்டனர். அடுத்து இந்த வாரத்திற்கான சூப்பர் பெர்போமர் பரிசினை கர்சிகா மற்றும் கர்ஷினி என்ற போட்டியாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து இந்த போட்டியில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற போட்டியாளர்கள் மேடைக்கு அழைக்கப்படனர். அவர்கள் சுஜேஷ், ஜீனா, தர்சனா, சன்சிதா என்ற நால்கு போட்டியாளர்களாவர்.
இவர்கள் 26 போட்டியாளர்களில் டூயட் சுற்றில் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளனர் என்பதால் இவர்களை போட்டியில் இருந்து நீக்கும் கட்டாயத்திற்கு நடுவர்கள் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் மேடையில் எழுந்து நின்று மரியாதை செலுத்தி நான்கு போட்டியாளர்களை அனைவரும் வழி அனுப்பி வைத்தனர். இனி இந்த சரிகமப வில் அடுத்தடுத்த சுற்றில் யார் யார் வெளியேறப்போகின்றனர் என பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |