தொடர்ந்து சாதனை படைக்கும் இலங்கையர்.. சரிகமபாவில் கலக்கும் கில்மிஷா- கொண்டாடும் ரசிகர்கள்!
சரிகமபா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை சிறுமி கில்மிஷா இரண்டாம் சுற்று வரை சென்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சரிகமபா
பிரபல தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமபா.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை சிறுமிகளான அசானி மற்றும் கில்மிஷா ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள்.
இடையில் வந்து நிகழ்ச்சியில் உள்நுழைந்திருந்தாலும் தன்னுடைய திறமையால் பல பாடல்கள்களை அசானி பாடி இருந்தார்.
கில்மிஷாவின் அடுத்த கட்டம்
இந்த நிலையில் சரிகமபா நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு செல்லும் 5 போட்டியாளர்களில் ஒருவராக கில்மிஷா அவர்கள் தெரிவாகியுள்ளார்.
அதிலும் போட்டிகள் இடம்பெறவுள்ளது தொடர்ந்து எப்படி அவரின் பாடல்கள் இருக்கும் என்பதனை பார்ப்பதற்காக இலங்கை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து இந்தியர்களை விட தொலைக்காட்சிகளில் இலங்கையர்களின் குரல் ஓங்கி வருகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி, பாடல் போட்டிகள் என தங்களின் திறமைகளை காட்டி வருகிறார்கள்.
மேலும் கில்மிஷா வெற்றி பெற அனைவரும் மனமார்ந்த வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |