நடிகை ராதா மகள் திருமணத்திற்கு கொடுத்த சீதனம் என்னென்ன தெரியுமா?
நடிகை ராதா தனது மகளுக்கு 500 பவுன் தங்க நகை மற்றும் ஸ்டார் ஹொட்டல் இவற்றினை சீதனமாக கொடுத்துள்ளார்.
நடிகை ராதா
1980-களில் தென்னிந்திய திரையுலகில், பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து முன்னணி நடிகையான வலம் வந்தவர் தான் நடிகை ராதா.
இவரது சகோதரி அம்பிகாவும், ராதாவும் சேர்ந்து பாரதிராஜா படமான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் அறிமுகமாகினர்.
முதல் படமே வெற்றிப் படமாகியதால், பின்பு தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ராதா ஹொட்டல் தொழிலதிபரான ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.
ராஜசேகரன் தனது குடும்பத்தை விட்டு 16 வயதில் வெளியே வந்தவர், தமிழகம் மற்றும் மும்மை காய்கறி கடைகள், ஹொட்டல்களில் சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.
பின்பு தனது கடினமான உழைப்பினால் ஹொட்டல் தொழிலில் தொழிலளதிபரானார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா, துளசி என்ற இரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.
இவர்கள் இருவரும் ஒருசில படங்களில் நடித்த நிலையில், பின்பு தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் கார்த்திகாவிற்கு கடந்த சில தினங்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
ரோஹித் மேனன் என்பவருடன், திருவனந்தபுரத்தில் இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில், தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மகளுக்கு ராதா கொடுத்த சீதனம்
கேரள முறைப்படி ஆடம்பரமாக நடைபெற்ற இந்த திருமணத்தில், கார்த்திகா தங்க இழையால் நெய்யப்பட்ட பட்டுப்புடவையில், கை, கழுத்து என அடுக்கடுக்கான கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்துள்ளார்.
கார்த்திகா மட்டுமின்றி அவரது தாய் நடிகை ராதாவும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்துள்ளார். ராதா ஒரு பக்கம் சினிமாவில் பல கோடி சம்பாதித்திருந்தாலும், மகளுக்கு கிலோ கணக்கில் தங்கநகைகள், 5 ஸ்டார் ஹோட்டல் என வைத்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் ராதாவின் கணவர் எஸ். ராஜசேகரன் நாயர் 25 வருட கடின உழைப்பு முக்கியமாக இருந்துள்ளது. இந்த தம்பதிகளின் சொத்து மதிப்பு சமீபத்தில் 300 கோடிக்கு மேல் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கார்த்திகாவுக்கு நடிகை ராதா தாய் வீட்டு சீதனமாக 500 பவுன் நகைகளையும் கணவருக்கு இருக்கும் 3 நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றையும் அவருக்கு அளித்துள்ளனர்.
கார்த்திகாவின் தந்தைக்கு மும்பை, கேரளம், தமிழகத்தில் ஹோட்டல்கள் உள்ளன. உதய் சமுத்திரா லீஷர் பீச் ஹோட்டல் என்ற பெயரில் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |