அந்த Gap-ல தான் அப்பாவின் மொத்த வலியும் இருக்கு... கண்ணீர் மல்ல வைக்கும் காணொளி!
பிரபல தொலைக்காட்சியில் சரிகமப Li'l Champs Season 5 வெற்றிநடை போட்டு வரும் நிலையில், இந்த வாரம் Dedication Round இடம்பெற்றுள்ளது.
சரிகமப Li'l Champs Season 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. எத்ததையோ பாடல் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

அதன் ஒரு சீசன் சீனியர்களுக்கும் அடுத்த சீசன் ஜூனியர்களுக்கும் மாறி மாறி நடத்தப்படுவது வழக்கம்.அந்தவவையில், தற்போது சரிகமப Li'l Champs Season 5 வெற்றிநடை போட்டு வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று, தனது உருக்கமான மற்றும் உணர்ச்சிகரமான பாடல்கள் மூலம் நடுவர்கள் மற்றும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் தான் பாடகர் சுமன் ராஜ்.

இந்த வாரம் Dedication Round இல் பாடல் பாடும் முன்னர் சுமன் ராஜ் தனது தந்தைக்கும் தனக்கும் ஒரே கேள்விகளை கேட்க சொல்லி, தொகுப்பாளினி அர்ச்சனாவிடம் ஒரு காதிதத்தை கொடுத்தார்.
அதில் இருந்த உணர்வு பூர்வமான கேள்விகளை ஒவ்வொன்றாக அர்ச்சனா கேட்க சுமன் ராஜின் தந்தை, தொகுப்பாளினி உட்பட அரங்கமே கண்ணீரில் ஆழ்ந்த காணொளி தற்போது இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |