சங்கீதாவும் இப்படி தான்... நடிகையிடம் விஜய் ஓபனாக சொன்ன விஷயம்
விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சைகளுக்கு மத்தியில், அப்படியே சங்கீதா போல் என விஜய் ஒரு நடிகையிடம் பகிர்ந்த விடயம் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அவரின் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியுள்ளார்.

விவாகரத்து சர்ச்சை
தமிழகத் தேர்தலுல் நெருங்கும் நிலையில், விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவாகரத்து மனுவில், விஜய் மற்றொரு நடிகையுடன் நெருக்கமாகப் பழகுவதால் அவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என்றும் தனக்கும் பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் புதிய மனு ஒன்றையும் சங்கீதா தாக்கல் செய்திருந்தார்.

அதற்கு மத்தியில் விஜய்யும் த்ரிஷாவும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகியாக நிலையில், சங்கீதாவின் இந்த குற்றச்சாட்டு மூலம் அந்த நடிகை த்ரிஷா தான் அந்த நடிகை என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே விஜய்யும், த்ரிஷாவும் ஒரே நிற ஆடையில் ஒன்றாக, கல்பாத்தி அகோரம் மகன் திருமணத்தில் கலந்துக்கொண்ட புகைப்படங்களும், காணொளிகளும் வெளியாகி இணையமே போர்களமாக மாறியது.

இது குறித்து சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இணையத்தில் விமர்சினங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் மற்றும் சங்கீதா தொடர்பான பழைய காணொளிகள் அனைத்தையும் ரசிகர்கள் மீண்டும் இணையத்தில் பகர ஆரம்பித்திருக்கின்றார்கள். அதனை பார்த்த பலரும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த தம்பதிகள் இப்படி பிரிய போறாங்களே என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
ஜனனி பேட்டி

இது ஒரு புறம் இருக்க தற்போது பிக்பாஸ் பிரபலமும், லியோ படத்தில் நடித்தவருமான ஜனனி பேசியிருக்கும் காணொளி இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றது.
இலங்கை நடிகை ஜனனி சில வருடங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில், "லியோ ஷூட்டிங்கின்போது விஜய் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என பேசிக்கொண்டிருந்தார்.
இலங்கை என சொன்னேன். அதற்கு அவர், எனது மனைவிகூட யாழ்ப்பாணம்தான் தெரியுமா என கேட்டார். தெரியும் சார் என சொன்னேன்.
அப்போது அவர், பேசுவதற்கு நீங்க கதைத்தல் என்றுதானே சொல்வீங்க ,எனது மனைவியும், அவரது சகோதரியும் அப்படியே நீங்கள் பேசுவது போல் தான் பேசுவார்கள் என்று கூறியிருந்தார். என குறிப்பிட்ட விடயம் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |