சரிகமப-வில் உணர்ச்சி தழும்ப பாடிய சிறுவன்! ஆனந்தக்கண்ணீரில் கட்டியணைத்த பாடகர்
சரிகமப வில் தற்போது பக்தி பாடல்கள் சுற்று ஆரம்பமாக உள்ளது. இந்த சுற்றில் போட்டியாளர் திவினேஷ் பாடிய பாடல் அனைவரையும் கண்ணீர் வர வைத்துள்ளது.
சரிகமப
தற்போது சரிகமபவில் லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 4 நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 26 போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்த நிலையில் இதில் நான்கு போட்டியாளர்கள் கடந்த வாரம் போட்டியை விட்டு வெளியேறி சென்றனர்.
இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் சிறப்பான திறமையை காட்டி வருகின்றனர். சிறிய வயதாக இருந்தாலும் அவர்களின் பாடும் திறமையோ மிகையாக உள்ளது.
போட்டியாளர் திவினேஷ் இந்த போட்டியில் கலந்து கொண்டது இந்த நிகழ்ச்சிக்கே ஒரு வரம் என்றால் அது மிகையாகாது. தன் தாத்தாவுடன் இருந்து பழைய பாடல்களை அருமையாக பாட கற்றுக்கொண்டுள்ளான் இந்த சிறுவன்.
திவினேஷ் என்ற சிறுவன் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' என்ற பாடலை பாடி அரங்கத்தில் இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார். இந்த பாடலை அவர் பாடும் போது உணர்ச்சி தழும்பும் படி பாடியது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளதை இந்த ப்ரொமோவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |