திருமணமாகி 2 மாதத்தில் தான் நடந்ததா? உண்மையை கூறிய சோபிதா
நடிகர் நாக சைதன்யாவின் தண்டேல் படம் வெளியானதை அடுத்து அவரது மனைவி சோபிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சோபிதா துலிபாலா
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி நாக சைதன்யா 2ஆவதாக நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்தார். நடிகை சமந்தாவின் காதல் கணவரை இரண்டாம் தாரமாக சோபிதா திருமணம் செய்துள்ளார்.
சமந்தாவுடன் விவாகரத்து பெற்ற பின்னர் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வந்தாக சமூக வலைத்தள பக்கத்தில் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது திருமணமாகி சைதன்யா, சோபிதா தம்பதியினராக அன்யோன்யமாக வாழ்ந்து வருகின்றனர்.
திருமணத்திற்குப் பிறகு நாக சைதன்யா நடிப்பில் வெளியாகும் முதல் படம் தண்டேல். இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகை சோபிதா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியும் கூறியுள்ளார்.
தண்டேல் வெளியீட்டையொட்டி படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். அவர் கூறியது. தண்டேல் படப்பிடிப்பு நடந்த நாட்களில் நீங்கள் மிகவும் நேர்மறையாகவும், கவனம் செலுத்தியவராகவும் இருந்தீர்கள்.
அனைவருடனும் சேர்ந்து நானும் இந்தப் படத்தை திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று சோபிதா தனது கணவரின் படத்தைப் பற்றி பதிவிட்டுள்ளார்.
அதிலும் நீங்கள் கடைசியாக உங்கள் தாடியை ஷேவ் செய்கிறீர்கள். முதல் முறையாக உங்கள் முகத்தைப் பார்க்கிறேன் என்று சோபிதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சோபிதாவின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் திருமணமாகி இவ்வளவு நாட்களில் அவரின் முகத்தை பார்க்கவில்லையா? என ஆச்சரிய பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |