சரிகமப-வில் முதல்கட்ட தேர்வில் வெற்றபெற்ற 3 போட்டியாளர்கள் விறுவிறுப்பின் உச்சம்
சரிகமபவில் இந்த வாரம் One On One சுற்றில் இரு இரு போட்டியாளர்கள் போட்டி போட்ட நிலையில் இதில் வெற்றி பெற்ற போட்டியாளர்களின் தகவல் கீழே தரப்பட்டுள்ளது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு பிடித்த சுவாரஸ்யமான சுற்றுக்களை கொடுக்கும் சரிகமபவில் இந்த வாரமும் அதே போல் One On One Round நடைபெற்று கொண்டு வருகின்றது.
இந்த சுற்றில் இரு போட்டியாளர்கள் போட்டி போட்டு பாடுவார்கள். இதில் யார் மிகவும் அருமையாக பாடி நடுவர்கள் மனம் கவர்கின்றனர் என்பதை பொறுத்து ஒரு போட்டியாளர் தெரிவு செய்யப்பட்டு மெடல் அணிவிக்கப்படுவாா்கள்.
இப்படி தெரிவு செய்யப்படும் போட்டியாளருக்கு இரண்டு கோல்டன் மைக் நடுவர்களால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த வகையில் இந்த வாரத்தின் சனிக்கிழமை எபிசோட்டில் இருவர் இருவராக போட்டியிட்ட நிலையில் அபினேஷ், யோகஸ்ரீ, ஷ்ராஜான்வி என்ற 3 போட்டியாளர்களுக்கு மெடல் அணிவிக்கப்பட்டு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |