கல்லீரலில் நச்சை வெளியேற்ற வேண்டுமா? தினமும் இந்த ஒரு நீர் இருந்தா போதும்
தற்போது இருக்கும் பழக்க வழங்கங்களின் காரணமாக நாம் நமது ஆரோக்கியத்திற்கு எதிரிகளாக மாறி வருகிறோம். பல மணி நேரம் இருந்தபடியே வேலை செய்வது துரித உணவுகள் எடுத்துக்கொள்வது இதுபோன்ற பழக்க வழக்கங்கள் ஆரோக்கியத்தை கொல்கின்றது.
இதற்கு நாம் வீட்டு வைத்தியங்கள் அல்லது நல்ல உணவுகளை உட்கொள்ளுதல் சிறந்தது. உலர் திராட்சை நீர் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் பிரச்சனைகளில் இருந்து விடுபட இதை குடிக்கலாம். இந்த நீரை குடிப்பதால் கிடைக்கும் இன்னும் பல நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
திராட்சை நீர்
உலர் திராட்சையை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம்.
உலர்ந்த திராட்சை நீர் கல்லீரலை நச்சு நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். கல்லீரல் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க திராட்சை நீரையும் குடிக்கலாம். குடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த இந்த திராட்சை நீரை குடிக்கலாம்.
இந்த திராட்சைநீர் மிகவும் மருத்துவ குணம் நிறைந்தது. குறிப்பிட்ட பிரச்சனைகள் மட்டும் இந்த நீரால் குணமாக்கப்படாது. இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் இது உடலில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் இல்லாமல் செய்யும்.
இது ஆயுள்வேதத்தாலும் பரிந்துரைக்கப்படும் ஒரு மருத்துவமாகும். உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 20-25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து வந்தால் உடல் சூடு நீங்கும்.
எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த உலர் திராட்சை நீர் மிகவும் உதவுகிறது. இதை தினந்தோறும் நீங்கள் காலையில் வெறும்வயிற்றில் குடித்து வருவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
