சரிகமப : இறுதி சுற்று போட்டியாளராக தேர்வான ஷிவானியின் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டுக்கள்
சரிகமப வில் 5 ஆவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவான ஷிவானி தனக்கு கிடைத்த கிரிடத்தையும் மரியாதையையும், தனக்கு பயிற்றுவித்தவரை மேடைக்கு அழைத்து வந்து, அணிவித்து ஷிவானி செய்த நெகிழ்ச்சி செயலால் அரங்கமே கண்ணீரில் ஆழ்ந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரிகமப சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப.

தற்போது சீசன் 5 நிகழ்ச்சியில் இறுது சுற்று போட்டியாளர்களை தேர்வு செய்யும் ரவுண்ட்கள் இடம்பெற்று வந்த நிலையில், ஷிவானி 5 ஆவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவாகியுள்ளார்.
ஏற்கனவே, சுஹாந்திகா, ஸ்ரீஹரி, சபேசன், செந்தமிழன் என 4 பேர் இறுதி சுற்று போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் இறுதியாக 5வது இறுதி சுற்றுப்போட்டியாளருக்கான Ticket to finale ரவுண்ட் நடந்துள்ளது.
அதில் சிறப்பாக பாடிய ஷிவானி தான் சரிகமப சீசன் 5ன் 5வது இறுதி சுற்று போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதன் போது தனக்கு கிடைத்த கிரிடத்தை தனக்கு பயிற்றுவித்தவரை மேடைக்கு அழைத்து வந்து, அணிவித்து ஷிவானி செய்த நெகிழ்ச்சி செயல் இணையத்தில் பாராட்டுகளையும், லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |