Taste Atlas ranking: உலகின் டாப் சிக்கன் ரெசிபி பட்டியலில் பட்டர் சிக்கன்! ரெசிபி வேண்டுமா?
உலகெங்கிலும் உள்ள பிரபல்யம் வாய்ந்த உணவு வகைகளை மதிப்பிட்டு, தரவரிசைப் பட்டியல்களை வெளியிடும் பிரபல உணவு வழிகாட்டி அமைப்பான டேஸ்ட் அட்லஸ் (TasteAtlas) ஆல் வெளியிடப்பட்டுள்ள 20 சிறப்பான சிக்கன் ரெசிபி பட்டியலில் இந்தியாவை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில், பட்டர் சிக்கன் 5 ஆம் இடம் பிடித்துள்ளது.
இந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான, சர்வதேச அளவில் பட்டர் சிக்கன் என்று அழைக்கப்படும் முர்க் மக்கானி, பெரும்பாலான இந்திய உணவகங்களில் ஒரு முக்கிய உணவாக கருதப்படுகின்றது.

இந்த உணவு 1950களில் டெல்லியில் குந்தன் லால் குஜ்ரால் என்ற நபர் தனது மோதி மஹால் என்ற உணவகத்தைத் திறந்தபோது உருவானகியது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், உலகின் 20 சிறப்பான சிக்கன் ரெசிபி பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ள பட்டர் சிக்கன் ரெசிபியை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் - 700 கிராம்
சிவப்பு மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
இஞ்சி மற்றும் பூண்டு விழுது-1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தயிர் -ஒரு கப்
குழம்புக்கு தேவையானவை
வெள்ளை வெண்ணெய்(பட்டர்) - 175 கிராம்
சீரகம் -1/2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 500 கிராம்
சர்க்கரை -1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
பிரஷ் கிரீம் -100 கிராம்
பச்சை மிளகாய்- 4 (நறுக்கியது)
வெந்தய இலைகள் - சிறிதளவு
செய்முறை

முதலில் சிக்கனை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் பேட்டு, சிவப்பு மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் ஊறவிட வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து ஊறவைத்த சிக்கனை 10-12 நிமிடங்கள் வறுத்துக்கொள்ள வேண்டும்.

இறைச்சி முழுமையாக வேகக்கூடாது, ஆனால் சுமார் 3/4 மட்டுமே வேகவைக்க வேண்டும். அதற்கிடையில் கிரேவி தயாரிக்கத் தொடங்குங்கள்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயில் ஒரு பகுதியை உருக்கி, பின்னர் தக்காளி சாஸ் சேர்த்து 2-3 நிமிடங்கள் சமைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் சீரகம், சர்க்கரை, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
நன்றாக வதங்கிய நிலையில், சிக்கன், மீதமுள்ள வெண்ணெய், பிரஷ் கிரீம், துண்டுகளாக்கப்பட்ட பச்சை மிளகாய் மற்றும் வெந்தய இலைகளைச் சேர்த்து நன்றான கிளறிவிட வேண்டும்.
அவை அனைத்தும் 3-4 நிமிடங்கள் வதக்கிய பின்னர் சிக்கனை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 5 நிமிடங்கள் வேகவைத்து இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் உலக தரம் வாய்ந்த பட்டர் சிக்கன் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |