அடிக்கடி மது பார்ட்டியில் கும்மாளம்.. மகளை பற்றி பேசியவரை வெளுத்து வாங்கிய சரத்குமார்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சரத்குமார். இவர் சமத்துவ கட்சி தலைவராகவும் உள்ளார்.
இதையடுத்து, இவரின் மகளான வரலட்சுமி மீது காதல் கிசு கிசுக்கப்படுவது வழக்கமான ஒன்று..
அந்தவகையில், பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருடன் காதல் செய்கிறார் என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் கூறப்பட்டது.
அதன்பின்னர். தற்போது வரலட்சுமி ஒரு பிரபல நடிகர் மீது காதல் கொண்டிருப்பதாகவும், அதன் காரணாமாக அடிக்கடி மதுவிருந்துகள் கொண்டாடுவதாகவும் ஒரு தகவல் வைரலாகி வருகின்றது.
இதை ஒரு பிரபலம் சரத்குமாரிடம் போட்டுக்கொடுத்தபோது எனது மகளுக்கு யாரிடம் என்ன பேச வேண்டும் எப்படி பழக்க வேண்டும் என்று நன்றாக தெரியும் உங்கள் வேலையை பாருங்கள் என்று ஆதங்கப்பட்டு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.